Monday, August 02, 2010

தரமே தராக மந்திரம் RELIANCE FRESH

ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பொருளை வாங்கச் செல்லும் போது மன உளைச்சலுடன் மகிழ்ச்சியையும் தொலைத்து விட வேண்டியுள்ளது.  இரும்பு சமாச்சாரங்களைத் தவிர பெரும்பாலான பொருட்களின் நிதி மூலம் ரிஷி மூலம் ஓரளவிற்கு தெரிந்து இருப்பதால் விற்பவர் எந்த அளவிற்கு தெளிவாக வியாபாரம் செய்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. 

அவர் பேசி முடித்ததும் எத்தனை சதவிகித கொள்ளை லாபம் என்று மனதிற்குள் படமாய் தெரிந்து விடும்..

இங்கு தொடக்கத்தில ரிலையன்ஸ் ப்ரெஷ் அவினாசி சாலையில் திறந்த போது மிகுந்த ஆர்வமாய குடும்பத் துடன் உள்ளே நுழைந்தோம்.  முழுக்க குளீருட்டப்பட்ட வசதியுடன், தேர்ந்தெ டுக்க எளிதான வகையில்,.  என்னு டைய அவசரத்திற்கும் ஈடு கொடுப் பதாய் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து மெதுவாக அந்த பட்டியல் சீட்டைப் பார்த்த போது உள்ளே ஓடிக் கொண்டுருந்த மொத்த மொள்ளமாரித்தனமும் தெரிந்தது.

 ரிலையன்ஸ் நேரிடைப்பார்வையில் உள்ள கோதுமை மாவு, டீத்தூள்ள தவிர அத்தனையும் நாகரிக கொள்ளை விலை. இது போக சிறப்புக் கழிவு, அட்டை வசதி என்று அவர்களின் உறிஞ்சும் தந்திரம் புரிந்து அன்றோடு நிறுத்திக் கொண்டோம்.

ஒவ்வொரு வார கடைசியிலும் சிறப்புத் தள்ளுபடி என்று குறுஞ்செய்தியும் மின் அஞ்சலும் வரும். ஆனால் வாழ்க்கைக்கு தேவையில்லாத அத்தனை நாகரிக பொருட்களையும் தலையில் வைத்து கட்டிவிட அவர்கள் செய்யும் அத்தனை ஏற்பாடுகளையும் பார்த்த போது மொத்தமாகவே புறக்கணித்தே விட்டோம்.

தொடக்கத்தில் உள்ளே நுழைந்த போது கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது.  மானத்தை மறைக்க தேவையில்லாத உடைகளும், பிசகி விழுந் தால் குறுத்தெலும்பு உடைந்து விடக்கூடிய ஹை ஹீல்ஸ் செருப்புமாய் நிறைய யுவதிகள் அக்கறை யாய் ஒவ்வொரு பொருட் களையும் தள்ளு வண்டியில் அள்ளிக் குவித்துக் கொண்டு இருப்பாரகள். 


அரிசி, பருப்பு, பொடி வகைகள்,எண்ணெய்கள்,காய்கறிகள் இவை மட்டுமே உள்ளே நுழையும் நடுத்தர மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான சாமான்கள். மீதி உள்ள 70 சதவிகிதம் பன்னாட்டு நிறுவனங்களின் விலை கொழுத்த ஆடம்பர சமாச்சாரங்கள். வெளிநாட்டில் இருந்து வந்த பெண்மணி உள்ளே நுழைந்து விலையை யூரோவில் பெருக்கி பார்த்து விட்டு பெருங்குரல் எடுத்து கத்தாத குறை தான். அவசரமாய் வெளியே அழைத்து வந்து விட்டேன்.

முகம் துடைக்கும் சிறிய கைத்தறி துண்டுகளை மூன்றாக கட்டி வைத்து அதற்கு ஒரு அலங்காரம் செய்து ரூபாய் 79 என்று போட்டு இருந்ததை பார்த்த போது இதையும் வாங்க ஆள் இருப்பார்கள் என்ற அவர்களின் நம்பிக்கை தான் தெரிந்தது..

தொடக்கத்தில் எல்லோருமே பயந்தார்கள்.  சிறு வியாபாரிகள் வாழ்வில் மண் விழுந்து விடுமோ என்று?  இந்த ஆரோக்கிய போட்டியை நான் தனிப்பட்ட முறையில் விரும்பினாலும் இவர்கள் கட்டும் மாயவலை என்பது மெதுமெது வாக நம்முடைய குரல்வளையை நெறிக்கத்தான் செய்கிறது.
                                                  
தொழில் நகரங்களில் வாழும் மக்களில் நடுத்தர வர்க்கம் என்பவர்கள் பல விதங்களிலும் சிறப்பாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.  நேற்று  எதிர்பாரத விதமாக உள்ளே சென்ற போது வாங்க வந்தவர்கள் மூன்று பேர்கள்.  எடுத்துக் கொடுக்க இருந்தவர்கள் பத்து பேர்கள்.   உள்ளே இருந்தவர் மிகுந்த கவலையாய் சொல்லிய விஷயம். 

" ஏற்கனவே கூட்டம் இல்லாத காரணத்தால் மோர் என்ற வணிக அங்காடியை  மூடி விட்டார்கள்.  இதையும் விரைவில் மூடி விடுவார்கள் என்றே பயந்து கொண்டே தான் ஒவ்வொரு நாளும் வருகின்றோம்."

"விலை என்பது வாங்குபவர்களுக்கு வசதியாய் இருக்க வேண்டும்.  தரம் என்பது அடுத்த முறையும் வரவழைக்க வேண்டும்"

இன்றைய ஆடை உலகின் அவஸ்த்தைகளும் இங்கிருந்து தான் தொடங்கு கிறது. .. 

இன்று திருப்பூரில் பழைய பெருச்சாளிகள் பழங்கதைகளையே நினைத்துக் கொண்டு வங்கிக்கு பயந்து கொண்டு வாழும் வறட்டுக் கௌரவ வாழ்க்கை தான் சிறு தொழில்களிலும் கால் பதிக்கும் ரிலையன்ஸ்க்கும் எதிர்காலத்தில் பரிசாக கிடைக்கும். ஏற்கனவே ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க அனுபவம் பலருக்கும் பல பாடங்களைத் தந்தது என்பதை இங்கு குறிப்பிடலாம்?

இதுவரையிலும் என்னுடன் தொடர்ந்து பயணித்து வந்து, ஆடை உலகத்தின் நீள அகலங்களை வாசித்தவர்களுக்கு ஒலி ஒளி அனுபவமாக ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் செயல்பாடுகளை தனித்தனியாக கோப்பாக தரலாம் என்று நினைத்து உள்ளேன். 

உங்கள் புரிதல்களை தெரியப்படுத்துங்கள்.

34 comments:

செல்வம் said...

ரிலையன்ஸ் பிரஷ் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் அலங்காரம், குறைந்த விலை, வாடிக்கையாளர் சேவை போன்ற மாய்மாலங்களால் கிட்டத்தட்ட ரிலையன்ஸின் கொ.ப.செ வாகவே இருந்தேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக விலையேற்றம், நுகர்தூண்டல் போன்ற விடயங்களால் கடுப்பாகி கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்க ஆரம்பித்தேன். இவர்கள் சந்தையில் நுழைந்தபின் தான் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம், காய்கறிகள் அனைத்தும் கிலோ 24 ரூபாய், போன்ற பாதிப்புகளை நேரடியாக அனுபவித்து வருகிறோம். நமது பிரதமரும் ஏதோ இப்போது தான் இந்தியாவில் மழை நின்று விட்டது போலவும், 90 களுக்கு முன்பு மாதம் மும்மாரி பெய்தது போலவும் சப்பைக் கட்டு கட்டுகிறார். இதற்கெல்லாம் நம் அளவிலான எதிர்ப்பு இவர்களைப் புறக்கணித்து விட்டு தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதே...

அன்புடன்

செல்வம்

www.kadalaiyur.blogspot.com

Anonymous said...

Food World, Spencer, More வரிசையில் அடுத்தது ரிலையன்ஸ் ப்ரெஷ்.....

சென்ற வாரம் 90 சதவிகித கழிவில் பொருட்கள் விற்கப்பட்டது.

ரவி said...

ரிலையன்ஸ் ப்ரஷ் காலாவதியான உணவுப்பண்டங்களை விற்பது ஊர் அறிந்தது. ரிலையன்ஸ் ஓல்ட் என்று மாற்றிக்கொள்ளலாம் பெயரை.

ஹேமா said...

மனதில் தேவைக்குண்டான திட்டமும்,அளவான ஆசையும் இருந்துவிட்டால் ...நான் நினைக்கிறேன் நிதி மூலம் ரிஷி மூலத்தைச் சமாளிக்கலாம்.

வியாபாரிகள் தலையில் கட்டி விடுகிறார்கள் என்று மத்திய தரக் குடும்பங்கள்தான் சொல்கிறோம்.
எங்களுக்குக் கீழ் உள்ளவர்கள் அந்தப் பக்கமே போகமாட்டார்கள்.ஆனாலும் வண்டில் நிறைய மானத்தை மறைக்க தேவையில்லாத உடைகளும் பிசகி விழுந்தால் குறுத்தெலும்பு உடைந்து விடக்கூடிய ஹை ஹீல்ஸ் செருப்புமாய் வாங்குபவர்கள் இருக்கிறார்கள்தானே.
அதுவரை இந்த ஆட்டம் தொடரும் ஜோதிஜி !

Paleo God said...

நான் சொல்லவந்ததை ரவி சொல்லிவிட்டார் :)
ஸ்பென்ஸரிலும் இதுபோன்று நடந்திருக்கிறது தேதி முடிந்த பிரபல இனிப்பு சோன் பப்படி விற்றார்கள், கேள்வி கேட்கும் முன்பே மாற்றித் தந்தார்கள். மறு நாள் சென்றபோது மீண்டும் அதே தவறு. ஹும்ம் எச்சரிக்கத்தான் முடிந்தது! :(

கிடைத்த வரை காதியில் வாங்குவது என் பழக்கம். :)

பின்னோக்கி said...

முதல் 4 வரிகளில், நான் பல நாள் நினைத்துப் பார்த்த விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். நல்ல வேளை, எனக்கு பெரும்பாலான பொருட்களின் லாப விபரம் தெரியாது. தெரிந்தால் மன உளைச்சல் தான் என புரிந்துகொண்டேன். சென்னையிலும், கூட்டம் அலை மோதுகிறது. 1 தடவை போய் வந்ததோடு சரி.

'பரிவை' சே.குமார் said...

//மனதில் தேவைக்குண்டான திட்டமும்,அளவான ஆசையும் இருந்துவிட்டால் ...நான் நினைக்கிறேன் நிதி மூலம் ரிஷி மூலத்தைச் சமாளிக்கலாம்.

வியாபாரிகள் தலையில் கட்டி விடுகிறார்கள் என்று மத்திய தரக் குடும்பங்கள்தான் சொல்கிறோம்.
எங்களுக்குக் கீழ் உள்ளவர்கள் அந்தப் பக்கமே போகமாட்டார்கள்.ஆனாலும் வண்டில் நிறைய மானத்தை மறைக்க தேவையில்லாத உடைகளும் பிசகி விழுந்தால் குறுத்தெலும்பு உடைந்து விடக்கூடிய ஹை ஹீல்ஸ் செருப்புமாய் வாங்குபவர்கள் இருக்கிறார்கள்தானே.
அதுவரை இந்த ஆட்டம் தொடரும் ஜோதிஜி !//

Repeat...

அது ஒரு கனாக் காலம் said...

எனக்கு என்னவோ , நாணயத்தின் மறுபக்கம் வரவில்லையோ என்று தோன்றுகிறது ... இது போன்ற கடைகள் நேரடியாக கொள்முதல் செய்வதால் , உற்பத்தியாளர்களுக்கு ( விவசாயி ) நல்ல விலை கிடைக்கிறது என்று கேள்வி .... அவசியமில்லாத பொருள்கள் ...நான் ஹேமா அவர்களை வழிமொழிகிறேன் , நாம் என்ன தான் ஜாக்கிரதையாக இருந்தாலும், நுகர்வோர் கலாசாரம் நம்மை ஒரு வழி செய்துவிட்டுதான் போகும் ..

லெமூரியன்... said...

ஹைதராபாத்தில் லகரங்களில் மாத சம்பளம் வாங்கும் தோழி ஒருத்தி என்னை அடிக்கடி ஷாப்பிங் என்று
ரிலையன்ஸ் பிரெஷ் மற்றும் பிக் பஜார் கடைகளுக்கு அழைத்து செல்வாள்...
அவள் வாங்கும் அத்தனை பொருட்களுமே உபயோகமற்ற பொருட்கள்தான் பொதுவில்...
வேடிக்கை பார்த்து விட்டு வெளியில் வந்து விடுவேன்....
அங்கே வருகிறவர்கள் பெரும்பாலும் மேல் நடுத்தர வர்க்கமாகவே இருக்கும்...
கூர்ந்து கவனித்து பொழுது ஒன்று புரிந்தது...
அத்தியாவசிய பொருட்களுக்காக அங்கே வருகிறவர்கள் ரொம்ப கம்மி...
அப்படி வருகிறவர்கள் பெரும்பாலும் மேல் தட்டு மக்கள் தான்...!

\\ஏற்கனவே ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க அனுபவம் பலருக்கும் பல பாடங்களைத் தந்தது என்பதை இங்கு குறிப்பிடலாம்?....//
அது பெருங்கொடுமை..! ரத்த கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்கள் முதல் போட்டவர்கள்..!

ஒற்றைக்காலில் நின்று நெல்லை மாநகரத்தில் ரிலயன்க்ஸ் பிரெஷ் ஆரம்பிக்க போவதாக சொன்ன எனது தம்பியை புத்தி மதி சொல்லி மாற்றிவிட்டேன்...
இன்றைக்கு நெல்லையில் பரிதாபமான நிலையில்தான் இருக்கிறது அந்த கடை என நினைக்கிறேன்..!

பாலா said...

எங்க ஊரில் ரிலையன்ஸுக்கு வேற பேருங்க.

Walmart

பாலா said...

நேரம் கிடைக்கும் போது...

Wal-Mart: The High Cost of Low Price -ங்கற டாகுமெண்ட்ரியை பாருங்க. லிங்க் கீழே

http://video.google.com/videoplay?docid=-3836296181471292925#

ஜோதிஜி said...

குறைந்த விலை, வாடிக்கையாளர் சேவை போன்ற மாய்மாலங்களால் கிட்டத்தட்ட ரிலையன்ஸின் கொ.ப.செ வாகவே இருந்தேன்.

செல்வம் நானும் இதே போல் தான் தொடக்கத்தில் இருந்தேன். ஆனால் இன்று வரை இவர்களின் டீத்தூள் தரமும் விலையும் மற்றவர்களுடன் ஒப்பிட முடியாதது. சமீப காலமாக 40 சதவிகிதமும் உயர்த்தி அதிலும் கோல்மால் வரத் தொடங்கி விட்டது.

ஜோதிஜி said...

உண்மை தான் ரவி. சென்னையின் ரிலையன்ஸ் இரண்டாம் தர பொருட்களுக்கும், காலாவதியான பொருட்களை கைமாற்றி விடுவதும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி. இவர் தான் மொத்த சென்னைக்கும் பொறுப்பு. நபர்களை தேர்ந்தெடுக்கும் போது கூட எந்த அளவிற்கு கவனமாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

ஜோதிஜி said...

மனதில் தேவைக்குண்டான திட்டமும்,அளவான ஆசையும் இருந்துவிட்டால் ..

உண்மைதான் ஹேமா? ஆனால் மக்கள் சூடு பட்டாலும் கவுரத என்ற மாய்மாலம் இதுபோன்ற கடைகளுக்கு இழுத்துக் கொண்டே இருக்கிறது.

ஜோதிஜி said...

கொடுத்து வைத்தவர் ராம்குமார். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு மன உளைச்சல் அடைவதை விட இயல்பாக இருந்துவிட்டால் பிரச்சனையே இல்லை.

நன்றி குமார்.

ஜோதிஜி said...

ஷங்கர் இங்கு தான் பிணத்தை வைக்கும் ப்ரீசர் வைத்து உள்ளார்களே? வெளிச்சத்தில் அத்தனையும் கவர்ச்சி கன்னி போலத்தான் இருக்கிறது.

காதி கிராப்டில் ஐந்து வருடங்களாக வாங்கிக் கொண்டுருந்தாலும் அவர்களின் அலுவலக நேரம் நம்மை பலமுறை படுத்தி எடுத்தி விடுகிறது என்பதும் உண்மை.

ஜோதிஜி said...

சுந்தர் நுகர்வோர் காலச்சாரம் பற்றி நிறைவே எழுத வேண்டும். லெமூரியன் சொன்னது தான் நான் பார்த்தது. வாழ்வதற்கான பொருட்கள் எவரும் வாங்க வரவில்லை. ஒரு அம்மா தன் பையனிடம் சொல்லிக் கொண்டுருநதது.

உனக்கு 2 லிட்டர் மாசா எனக்கு கோக். அப்பாவுக்கு ஸ்பிரைட்.

நீங்கள் சொன்னது போல் முதன் முதலாக செங்கல்பட்டு பக்கத்தில் விவசாயிகளிடம் நேரிடையாக கொள்முதல் செய்ய என்பதற்காக ஒரு அலுவலகம் திறந்தார்கள். ஆனால் இன்று ஆசை அத்தனையும் மறைத்து விட்டது.

உங்களுக்குத் தான் தெரியுமே அம்பானி லாபம் என்றால் 300 சதவிகிதம் இருக்க வேண்டும்.

ஜோதிஜி said...

அத்தியாவசிய பொருட்களுக்காக அங்கே வருகிறவர்கள் ரொம்ப கம்மி...
அப்படி வருகிறவர்கள் பெரும்பாலும் மேல் தட்டு மக்கள் தான்...!


மேலும் இல்லை கீழும் இல்லை லெமூரியன். அத்தனையும் கடன் அட்டையை தடவி விட்டு மாதக் கடைசியில் கவிழ்ந்து அடுத்ததை தேடும் அர்த்தம் கெட்ட வாழ்க்கை ஜீவன்கள்.

தமிழ் உதயம் said...

பகட்டு எத்தனை நாளைக்கு மினுமினுப்பை தரும். அவர்கள் நிறுவனங்கள் மூடப்படும் சேதி, நம் காதில் பாயும் தேன்.

ஜோதிஜி said...

ரமேஷ் நீங்கள் சொன்ன வரிசைப்பட்டியலைப் பார்த்தவுடன் தான் எங்கங்கு திறந்தார்கள்? எப்போது மூடினார்கள் என்று யோசிக்க முடிந்தது.

பாலா நீங்கள் கொடுத்த இணைப்பு நான் வெகு நாளாக தேடிக் கொண்டுருந்தது. உங்களுக்கு நன்றி.

வால்மார்ட் போட்டுள்ள 6.85 அமெரிக்க டாலர் என்பது பரவாயில்லை. மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தாலே போதும். ஆனால் இடையில் அங்கு ஒரு importer இங்கு ஒரு agent அதற்குப் பிறகு தான் உற்பத்தியாளர்களுக்கு வந்து நிற்கிறது. அதில் தான் பிரச்சனையே ஆரம்பம் ஆகிறது. வால்மார்ட் நேரிடையான கொள்முதல் மிகக் குறைவு. மற்றவர்களிடம் ஒப்படைத்து விடுவது தான் அதிகம்.

ஒன்று சேர் said...

தரமே தாரக மந்திரம் - ரிலயன்ஸ் பிரஷ் என்று எனது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்த தலைப்பை பார்த்தவுடன் ஆகா நம் நண்பர் தவறான ஒரு வியாபாரத்திற்கு அதன் குளிரூட்டலில் மயங்கி எழுதிவிட்டாரோ என்ற அச்சத்துடன் உள் நுழைந்தால் நடுத்தர வர்க்க நாகரீக நுகர்வு கலாச்சாரத்தை தனதாக்கிக்கொண்டு கொள்ளையடிப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள் நன்றி. மேலும் இது போன்ற பகட்டான சுய சேவை என்ற கடைகளுக்குள் தப்பித்தவறி மனைவி மற்றும் மகன், மகளுடன் நுழைந்தோமோ தொலைந்தோம். ஏன் நாமே வாங்கச் சென்ற பொருள் ஒன்றிரண்டு என்றால் சம்பந்தமில்லாத இன்னுமிரண்டை பொருக்கிப்போட்டுக் கொண்டு வருகிறோம். கிராமத்திலிருந்து 6 கி,மீ சைக்கிள் அழுத்திக்கொண்டு வந்து கீரை விற்பவரிடம் ஒரு ருபாய் குறைக்க மல்லுக்கட்டுகிறோம். - சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள் - சித்திரகுப்தன்

Unknown said...

உங்கள் ஒளி கோப்புகளை பதிவேற்றுங்கள்.. பதிவுலகில் அது இன்னொரு திசைக்கு வழிகாட்டும்..
மற்றபடி Reliance செய்வது வியாபாரத்தில் Diverse method இதனைப் பற்றி நான் ஒரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்...

அரவிந்தன் said...

அன்பின் ஜோதி,

ரிலையன்ஸ் அங்காடி பல இடங்களில் திறந்த கடைகளை தற்சமயம் மூடி வருகிறார்கள்.காய்கறிகள் மட்டுமே விலையை விசாரித்து வாங்க வேண்டும் வேறு எதற்கும் இலாயக்கில்லை.

ஜோதிஜி said...

ரமேஷ் ரிலையன்ஸ் உருவாக்கும் பகட்டு என்பது மக்களே விரும்புவதாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு இதெல்லாம் நட்டக்கணக்கில் வந்து கொண்டு சேர்ப்பதற்காக இருக்கலாம். பாவம் வங்கிகள். ஏற்கனவே கைபேசியில் புரட்சியை உருவாக்குகின்றேன் என்று கடைசியில் காப்பீடு மூலம் 450 கோடியை பெற்று கதையை முடித்தார்கள்.

ஜோதிஜி said...

கிராமத்திலிருந்து 6 கி,மீ சைக்கிள் அழுத்திக்கொண்டு வந்து கீரை விற்பவரிடம் ஒரு ருபாய் குறைக்க மல்லுக்கட்டுகிறோம்.

நுகர்வு கலாச்சாரத்தின் அருமை பெருமையை இவர்கள் மூலம் தான் ஆச்சரியமாய் உணர்ந்து கொண்டு இருக்கின்றேன் தோழரே.

ஜோதிஜி said...

அரவிந்தன்

உங்கள் மவுனம் கலைத்து உள்ளே வந்தமைக்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மைதான். காய்கறிகள் விலைகள் இரண்டு ரூபாய் அதிகமாக இருந்தாலும் தேர்ந்தெடுக்க வேண்டிய அவஸ்யமில்லாத தரம்.

ஜோதிஜி said...

செந்தில் உங்கள் குரலுக்கு நன்றி. நீங்கள் எழுத வேண்டும்.

Thenammai Lakshmanan said...

விலை என்பது வாங்குபவர்களுக்கு வசதியாய் இருக்க வேண்டும். தரம் என்பது அடுத்த முறையும் வரவழைக்க வேண்டும்"//
சரியான செய்தி .. ஜோதிஜி..

தாராபுரத்தான் said...

காலத்திற்கு தகுந்த பதிவுங்க..

கோவி.கண்ணன் said...

//முகம் துடைக்கும் சிறிய கைத்தறி துண்டுகளை மூன்றாக கட்டி வைத்து அதற்கு ஒரு அலங்காரம் செய்து ரூபாய் 79 என்று போட்டு இருந்ததை பார்த்த போது இதையும் வாங்க ஆள் இருப்பார்கள் என்ற அவர்களின் நம்பிக்கை தான் தெரிந்தது..//

விலையை வைத்து தரம் பார்க்கும் மக்கள் இருக்காங்க, அவர்கள் கைக்குட்டையை 1000 ரூபாய் கொடுத்து கூட வாங்குவார்கள்

கண்ணகி said...

நல்ல பதிவு ஜோதிஜி....இந்தமாதிரி பெரிய கடைகளில், ஆரம்பத்தில் மளிகைப் பொருள்கள் தரமாகவும், விலை குறைவாகவும், சுத்தமாகவும் இருந்த்தால் பெண்கள் மிகவும் விரும்பினோம்...மெல்ல மெல்ல விலை அதிகம் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்...அதனால் இந்தமாதிரி கடைகளில் மளிகைப்பொருள் வாங்குவதை விட்டுவிட்டேன்..

ஜோதிஜி said...

அதனால் இந்தமாதிரி கடைகளில் மளிகைப்பொருள் வாங்குவதை விட்டுவிட்டேன்.

நாங்களும் கண்ணகி

ஜோதிஜி said...

விலையை வைத்து தரம் பார்க்கும் மக்கள் இருக்காங்க, அவர்கள் கைக்குட்டையை 1000 ரூபாய் கொடுத்து கூட வாங்குவார்கள்


நிதர்சனம் கண்ணன்.

ஜோதிஜி said...

தாராபுரத்தான் ஐயாவுக்கு நன்றி.

தேனம்மை உங்கள் தொடர்வாசிப்புக்கு நன்றி.