Wednesday, September 08, 2010

அந்நிய செலவாணி உள்ளுர் களவாணி


ஆய்தத ஆடைத் தொழிலில் பெண்களின் இடம் மிகச் சிறப்பானது.  அர்பணிப்பு, அக்கறை, ஆர்வம் இதற்கு மேல் பணிபுரியும் நிறுவனம் பாதுகாப்பு எனில் மொதத குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக உள்ளே வந்து விடுவார்கள்.  ஆண்கள் மற்றும் இளைஞர்கள் என்றால் மரங்கொத்திப் பறவை போல காசு கிடைக்கும் இடமெல்லாம் சிறப்பு என்று தாவி ஓட்டம் பிடித்து கடைசியாக ஓட்டையாண்டியாகி ஒன்றுக்கும் உதவாத ஒதுக்கப்பட்ட ஆடைகள் போல ஏதோவொரு கீழ்த்தரமான நிர்வாகத்தில் சிக்கி சின்னாபின்னா பட்டுக் கொண்டுருப்பார்கள். 

ஒரு தைக்கும் பெண் எண்ணிக்கை அடிப்படையில் தைக்கும் வாய்ப்பு இருந்தால் தினந்தோறும் 1000 ரூபாய் சம்பாரிப்பது சர்வ சாதாரணம். இதுவே ஆண்கள் என்றால் வாரத்தில் 7 ஆயிரம் வரைக்கும் கொண்டு போய் டாஸ்மார்க்கில் சேர்த்து விடுவார்கள்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்ளே வந்த நவீனங்கள் அத்தனையும் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம்.  முதலாளிகளுக்கு உயிர் மூச்சை போக வைத்துக் கொண்டுருக்கும் முதலீடுகள். பணத்தை கொட்டிக் கொண்டே இருந்தால் அந்நியச் செலவாணி வாழ வைக்கும்.  இல்லாவிட்டால் உள்ளூர் களவாணியாய் மாற்றி விடும்.

ஒரு ஆய்த்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் முக்கிய இரண்டு பகுதிகள்.  துணியாக வந்து கத்திரி வைக்கும் இடமும், பல படிகள் தாண்டி இறுதியாக அயரன் (IRON & PACKING) செய்யும் பிரிவும்.  கத்திரி வைப்பவன் கூட ரெண்டு இன்ஞ் வெட்டி எறிந்தால் முதலாளி வெகு சீக்கீரம் தெருவுக்கு வரப் போகிறார் என்று அர்த்தம்.   சரியான முறையில் அளவு பார்த்து தேய்க்காமல் மடித்து வைக்கின்றார்கள் என்றால் வெளிநாட்டில் இருந்து வரும் ஓலையின் மூலமாக வங்கி அதிகாரி நிறுவனத்திற்குள் வந்து உட்காரப் போகின்றார் என்பதை சோசியம் பார்க்காமலே தெரிந்து கொள்ளலாம். 

வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆடைபயணத்தின் தொடக்கமான அலங்கரிக்கப்பட்ட பாலீதின் கவர்களில் உற்பத்தியின் போது உடைபட்ட ஊசிகள் சிக்கியிருந்தால் அல்லது அந்த ஆடைகளுக்கிடையே ஒட்டியிருந்தால் வெளிநாட்டில் இந்த ஆடைகளை இறக்குமதி செய்தவர் அவரின் மொத்த சொத்துக்களையும் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இழக்கப் போகின்றார் என்பதை எந்த தொழிலாளர்களும் உணர்வது இல்லை.  அதை உணர வைக்கும் பொறுமையும் எந்த முதலாளிகளுக்கும் இருப்பதும் இல்லை. ஒரே காரணம் சொல்வதை மட்டும் செய் என்ற இந்திய மனோபாவம்.

பெட்டி பெட்டியா ஆடைகளை அடைத்து எங்கங்கோ அனுப்புறோம்.  யார் யாரோ போடுவாங்க.  கப்பலையும், ஏரோப்ளேனையும் படத்ல தான் பார்த்துருக்கோம்.  இந்த பெட்டி கூட பயணம் செய்யுது.  அரசாங்க கஜானாப் பெட்டிக்குள்ள டாலாரும் யூரோவும் பவுண்டும் ரொம்பி வழியுதாம். மேலேயும் கீழேயும் களவாணிப் பய கூட்டம் அதிகமாகிப் போனதால நாங்க நடந்து வர்ற பாதை பாதிகூட போட்டு முடியல. அக்கா கால்ல குத்துன முள்ளக்கூட எடுக்க நேரமில்ல. எங்க முதலாளிக்கு நேத்து வந்த பாரின் காரு வாங்கனுமாம். ஏற்கனவே ஏழு காரு உள்ளே நிக்குது. அம்மா கேட்ட ஆயிரம் ரூபாயை அடுத்த கடிதம் வர்றதுக்குள்ள அனுப்பி வைக்கனும்.

கடந்து வந்த ஆடையுலக தொடர் இடுகையில் இன்று விஸ்ரூபம் எடுத்து நிற்கும் சாயப்பட்டறை பிரச்சனைகள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் தனிப்பட்ட நபர்களின் ஆசை அல்லது பேராசைகள்.  அடுத்து வரும் பல தலைமுறைகளை வாழவே கூடாது என்பதாக பணப்பேய்களின் தான் தோன்றித்தனம்.

அரசாங்கம், அவர்களின் கொள்கைகள், ஒத்துழையாமை போன்றவற்றையும் தாண்டி குறிப்பிட்ட முதலாளிகள் ஒன்று சேர்ந்தாலே இதை என்றைக்கோ முடிவுக்கு கொண்டு வந்துருக்க முடியும். ஆனால் சேர மாட்டார்கள். சேரவும் தோன்றது.  திருப்பூர் மின் மயானத்தில் உள்ளே விட்டு வெளியே வரும் பிடிசாம்பலை தினமும் பல முதலாளிகள் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். 


பணம் துரத்திப் பறவைகளின் ஆசைகள் அடங்கிய பாடில்லை.


காணொளியின் முதல் பகுதி


இரண்டாம் பகுதி 

ஆடை உலக தொடர் பயணத்தில் வந்தவர்களுக்கும் ,படித்தவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும், கருத்துரைத்தவர்களுக்கும், எப்போதும் போல அக்கறையுடன் ஓட்டளித்து நகர்த்திக் கொண்டுருப்பவர்களுக்கும் 


நன்றிங்கோ

38 comments:

பாலா said...

என்னது... நன்றியெல்லாம் பெரிசா சொல்லுறதை பார்த்தா... தொடர் முடிஞ்சிடுச்சி போல?? :(

--

நான் கார்மெண்ட்ஸில் ”சூப்பர்வைசரா” வேலை பார்த்தப்ப, அங்க கிடைச்ச ஆர்டர், சிரிக்கக் கூடாது... (நீங்க இல்ல, படிக்கிறவங்க)

6 பார்ட், 7 பார்ட் பாவாடைகள். எனக்கு இன்னிக்கு வரைக்கும்.. நீங்க மேல சொன்ன கட்டிங்ல இருந்து, அயர்னிங் வரைக்கும் தெரிஞ்ச ஒரே விசயம் இந்த பாவாடை மட்டும்தான்.

அத்தனை பாவாடைகளை அளவெடுத்து, கட் பண்ணி, தச்சி, அயர்ன் பண்ணியிருக்கேன். சம்பளம் எவ்ளோ தெரியுங்களா...??

அங்கயே தங்கி, சாப்பிட்டது மட்டும்தான்.

கடைசில... பணம் கொத்தி பறவைக்கு, என்னை விட மோசமான நிலைமை ஆய்டுச்சி. நான் இங்க வந்துட்டேன். அவரு.. ஆத்தூருக்கு பக்கத்துல ஒரு கிராமத்துல ஜோசியம் பார்த்துகிட்டு இருக்காராம்.

ஜோதிஜி said...

ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கு

மொத இடத்த பிடித்தமைக்கு,


அங்கயே தங்கி, சாப்பிட்டது மட்டும்தான்.

படிச்சு முடிச்சதும் சிரித்து மாள முடியவில்லை,

ஜோசியம் பார்த்துகிட்டு இருக்காராம்.

உருப்படியான வேலை,

ஜோதிஜி said...

தொடர் முடிஞ்சிடுச்சி போல?? :(

மின் அஞ்சல் பார்கல போல(?)

துளசி கோபால் said...

பெண்கள் அப்படிச் சட்ன்னு வேற இடத்துக்குத் தாவ மாட்டாங்க.

பதிவு வழக்கம்போல் அருமை.

ஜோதிஜி said...

வணக்கம் டீச்சர்

ரெண்டாவது இன்ப அதிர்ச்சி, பாலா முடிந்ததும் நீங்க,

பாலா said...

//பெண்கள் அப்படிச் சட்ன்னு வேற இடத்துக்குத் தாவ மாட்டாங்க.//

இதை ஆட்டோ பின்னாடி எழுதக்கூட யாரும் ஒத்துக்க மாட்டாங்க டீச்சர்.

ஜோதிஜி said...

இதை ஆட்டோ பின்னாடி எழுதக்கூட யாரும் ஒத்துக்க மாட்டாங்க டீச்சர்.

அட கம்ன்னு கிடங்க தல,

அவங்களே ஒரு டைலர்ன்னு சொல்லியிருக்காங்க, அவங்க சொன்னது உண்மை தான், பிரச்சனை எதுவும் இல்லைன்னா இங்கே நான் பார்த்தவரைக்கும் 5 வருசமெல்லாம் ஒரே நிறுவனத்தில் தான் இருக்காங்க,

இதிலும் நாதாரிங்க உண்டு. அத கண்டுக்கிடாதீங்கஜீ

பாலா said...

நீங்க ரெண்டு பேரும் சொல்வது திருப்பூரிலும், கார்மெண்ட்ஸ் தொழிலிலும் மட்டும்னா எனக்கு ஒத்துக் கொள்வதை தவிர வேற வழியில்லை... அது தெரியாதனால.

ஆனா... எனக்குத் தெரிஞ்சி, கம்பெனிகள் தாவுவதில் ஆண் பெண் பாகுபாடெல்லாம் இல்லை. நாங்கள்ளாம் ஒரே கம்பெனியில் குப்பை கொட்ட ஒரே ரீஸன் விசா மட்டும்தான்.

எந்த கம்பெனியிலும் ‘ஸேஃப்’ என்பதே கிடையாது. மனசுக்கு தோணலாம். ஆனா.. நிஜம் வேறு.

Bibiliobibuli said...

அடேங்கப்பா!! சின்னச் சின்ன விடயங்களில் பாரிய விளைவுகளின் எதிர்வுகூறல் மிக அழகு, ஜோதிஜி. ஆய்த்த ஆடைத்தொழிலில் கூட்டுக் களவாணித்தனம் பற்றி சொன்ன விதம் அருமை.

சும்மாவே "Made in India", Made in Sri Lanka", Made in Bangladesh" என்று இருந்தால் காத தூரம் ஓடுவேன். காரணம், இங்கெல்லாம் உழைப்புக்குரிய மதிப்போ அல்லது மரியாதையோ கொடுக்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் தான். இனிமேல் இன்னும் கவனமாக இருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.

ஜோதிஜி said...

எந்த கம்பெனியிலும் ‘ஸேஃப்’ என்பதே கிடையாது. மனசுக்கு தோணலாம். ஆனா.. நிஜம் வேறு

ஒரு பதிவே எழுதலாம் போலிருக்கே,

துளசி கோபால் said...

சம்பளம் கொஞ்சம் கூட வருதுன்னு உடனே வெளியூர் வேலைக்குப் போயிறமாட்டோம்.

குடும்பம் புள்ளைகுட்டி படிப்புன்னு ஆயிரம் காரணம் இருக்குதுங்களே.

இதே ஒரு ஆண் என்றால் போயிருவாங்க. வீக் எண்ட் வந்து குடும்பத்தைப் பார்த்துக்கிட்டுப் போறவங்களும் உண்டு.

ஆனா பெண் இப்படிச் செய்ய முடியுதுங்களா?

போற இடத்துலே தங்கும் இடம் பெரிய பிரச்சனை ஆச்சுங்களே:(

அதுவும் திருமணமான பெண்?

ஜோதிஜி said...

சும்மாவே "Made in India", Made in Sri Lanka", Made in Bangladesh" என்று இருந்தால் காத தூரம் ஓடுவேன்.

ரதி இப்படியும்யோசித்துப் பாருங்கள்,

இந்த மூன்று நாடுகளில் விலை போகாத அல்லது ஒப்பந்தங்கள் வராத பட்சத்தில் நிறுவனங்கள் எப்படி நடக்கும்?

உலகமயமாக்கல் என்று நாம் இந்தியாவைப்பற்றி தான் குறைகூறிக் கொண்டு இருக்கிறோம், யூரோப்பில் இருந்து பேசிய பெண் மணி போர்ச்சுகல்லில் கூட அந்நிய மூதலீட்டின் காரணமாக உள்ளுர் பொருட்களின் சந்ததை தள்ளாட்டமாக இருக்கிறதாம்,

இலங்கையை ஒதுக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் இந்தியா பங்களாதேஷ் யோசித்துப் பாருங்கள்(?)

ஜோதிஜி said...

குடும்பம் புள்ளைகுட்டி படிப்புன்னு ஆயிரம் காரணம் இருக்குதுங்களே.

இதே ஒரு ஆண் என்றால் போயிருவாங்க. வீக் எண்ட் வந்து குடும்பத்தைப் பார்த்துக்கிட்டுப் போறவங்களும் உண்டு.

இது நான் நடைமுறையில் பார்த்துக் கொண்டுருக்கும் உண்மையும் கூட,

வேர்ட்ப்ரஸ் ல் ஒரு பதிவில் எழுதி உள்ளேன், பாலா ஒரு வேளை நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டுருக்க (?) வாய்ப்பு உண்டு,

க.பாலாசி said...

நாங்கதாங்க உங்களுக்கு நன்றி சொல்லனும். இவ்ளோ விசயத்தையும் ஒண்ணுவிடாம பகிர்ந்திருக்கீங்க.. நிறைய தெரிஞ்சிகிட்டேன். திருப்பூர்ல துணி ஏற்றுமதிக்கு அடுத்ததா பார்த்தா ‘சரக்கு’ இறக்குமதிதான் அதிகமாயிருக்கும்னு நினைக்கிறேன். எல்லா டாஸ்மாக்குலையும் எப்பவும் கூட்டம் அப்பியிருக்கும். எல்லாருமே எதோவொரு நிறுவனத்தின் உழைப்பாளிகளா இருப்பாங்க...அதான் கொடுமை...

அன்பரசன் said...

நிதர்சனமான ஒரு பதிவு.

ஹேமா said...

ஜோதிஜி....நாங்கதான் நன்றி சொல்லணும் உங்களுக்கு.எனக்கு என்ன விளங்கிச்சோ இல்லையோ தேவைப்பட்டவர்களுக்கு
அத்தனையும் பிரயோசனமான பதிவுகள்.

பெயரையே பணம் துரத்திப்பறவைன்னு பெயர் வச்சிட்டு பணத்தாசையை விடுங்கன்னா எப்பிடி ஜோதிஜி !

தமிழ் உதயம் said...

ஆய்தத ஆடைத் தொழிலில் பெண்களின் இடம் மிகச் சிறப்பானது. அர்பணிப்பு, அக்கறை, ஆர்வம் இதற்கு மேல் பணிபுரியும் நிறுவனம் பாதுகாப்பு எனில் மொதத குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக உள்ளே வந்து விடுவார்கள். ///


உழைப்பு என்பது ஒரு சுவை. அதன் ருசி அறிந்தவர்கள் உழைத்து கொண்டே இருப்பார்கள். இதற்கு பாலின வேறுபாடு கிடையாது என்றே நினைக்கிறேன்

ஜோதிஜி said...

உழைப்பு என்பது ஒரு சுவை. அதன் ருசி அறிந்தவர்கள் உழைத்து கொண்டே இருப்பார்கள்.....

உங்களுக்கு விமர்சனப் புயல் என்று பெயர் வைக்கலாம் போல, உண்மையும் இது, தொடர்ச்சியாக பணி துரத்திக் கொண்டே இருக்கும் இந்த ஊரில் ஒரு நாள் விடுமுறை என்றாலே நமநம என்று இருக்கிறது,

எனக்கு என்ன விளங்கிச்சோ இல்லையோ தேவைப்பட்டவர்களுக்கு
அத்தனையும் பிரயோசனமான பதிவுகள்.

ஹேமா நண்பர் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது,

உங்கள் பதிவுகளை முகப்பில் பதிந்து வைத்துக் கொண்டு தான் பொறுமையாக படிக்கின்றேன் என்றார். தப்பு என் மேல் தான்,

நம்முடைய விருப்பங்கள் ஆர்வங்கள் இதற்கு மேல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நமக்கு இயல்பாக ஒரு தேடல் வந்து விடும்.

பதிவுலகம் என்பது போகிற போக்கில் படித்து விட்டு மறந்து விடுவது.

உங்கள் வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி ஹேமா,

தமிழ் உதயம் said...

பதிவுலகம் என்பது போகிற போக்கில் படித்து விட்டு மறந்து விடுவது. ///


100க்கு 100 அப்படி சொல்லி விட முடியாது. நாம் வேலையில் வந்து உட்கார்ந்து விட்டதால், இதன் அருமை தெரியவில்லை. பதிவுலகை நாம் எப்படி உள் வாங்குகிறோம் என்பதில் உள்ளது, இது மறக்க வேண்டியதா... மனதிலேயே வைத்திருக்க வேண்டியதா என்பது.

Bibiliobibuli said...

//இந்த மூன்று நாடுகளில் விலை போகாத அல்லது ஒப்பந்தங்கள் வராத பட்சத்தில் நிறுவனங்கள் எப்படி நடக்கும்?//

"சாயமே இது பொய்யடா" என்று பதிவெழுதிய ஜோதிஜியிடமிருந்து இந்த கேள்வி? இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகையை (GSP+) ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியதன் காரணம் போல் தான் இதுவும்.

மற்றப்படி, இந்த துறை இன்னும் அரசால் திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட (Regulate) வேண்டும் என்று நினைக்கிறேன், சாத்தியமா?

Chitra said...

பணம் துரத்திப் பறவைகளின் ஆசைகள் அடங்கிய பாடில்லை.

... :-(


.....பல விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு விழிப்புணர்வு இடுகை. இத்தனை விஷயங்கள் இருந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

a said...

//
பதிவுலகம் என்பது போகிற போக்கில் படித்து விட்டு மறந்து விடுவது.
//
ஹா ஹா ஹா.....

கோவி.கண்ணன் said...

//ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் தனிப்பட்ட நபர்களின் ஆசை அல்லது பேராசைகள். அடுத்து வரும் பல தலைமுறைகளை வாழவே கூடாது என்பதாக பணப்பேய்களின் தான் தோன்றித்தனம்.//

இது போன்ற சுரண்டல்கள் எல்லா படிநிலை வர்கங்களிலும் முடிந்தவரையில் நடக்கத்தான் செய்கிறது. எந்த ஒரு பொருளும் அழியக் கூடியது, வாழும் உயிர்கூட ஒருநாள் போகக் கூடியது தான் என்பதை மனிதர்கள் உணர்ந்தாலும் நடைமுறையில் நம்ப மறுக்கிறார்கள், பொருளீட்டளை வெற்றிகரமாக வாரிசுகளுக்கு கைமாற்றிவிட்டு செல்வதற்கு முடிவதால் சம்பாதித்தது போதும், மற்றோருக்கும் பகிர்ந்து கொடுப்போம் என்கிற மன நிலை பெருவாரியான மனிதர்களுக்கு வரவே வராது.

கண்ணகி said...

ஆசை இல்லையென்றால் வாழ்க்கை ஏது...கிடைக்கும்வரை பணத்தத் துரத்துகிறோம்...கிடைத்தபின் அது நமை துரத்துகிறது..

Thenammai Lakshmanan said...

மிக அருமையான இடுகை ஜோதிஜி.. ரமேஷ் சொன்னது உண்மை.. உழைப்பின் ருசி அறீந்தவர்கள் உழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள்...

vasan said...

நான் விமான‌ச்ச‌ர‌க்கு தொட‌ர்பான‌ தொழில்தான் 25 ஆண்டுக‌ளாக இருக்கிறேன்.
திருப்பூரில் குறிப்பிட‌த் த‌க்க‌ சில‌ரையும், மற்றும் ப‌ல‌ரையும் கொஞ்ச‌ம் அறிவேன்.
கோட்டாவுக்கு முன்பும், பின்பும், 2007க்கு முன்பும், பின்பும் என‌ மிக‌ப் பெரிய‌ மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்ந்து கொண்டுதான் இருக்கிற‌து. அதிக‌ மாற்ற‌மில்லாத‌து, முத‌லாளிக‌ளின் ம‌ன‌ நிலை ம‌ட்டுமே. இத‌ற்கும் மேலாக‌, நாட்டின் உல‌க‌ப் பொருளாதார‌க் கொள்கைகளும், ப‌ல‌ உள்நாட்டு அர‌சிய‌ல் பிண்ண‌னிக‌ளும், பின்ன‌லாடை ந‌க‌ர‌த்தை ந‌க‌ர்த்திக் கொண்டிருக்கிற‌து.
த‌ங்க‌ளின் கூர் பார்வை ப‌திவிலும் பிர‌திப‌லிக்கிற‌து.

'பரிவை' சே.குமார் said...

மிக அருமையான இடுகை ஜோதிஜி
பதிவு வழக்கம்போல் அருமை.

ஜோதிஜி said...

தொடர் வாசிப்புக்கு நன்றி குமார்.

வாசன் வாங்க. மிகத் தெளிவான பார்வையில் உள்ள விமர்சனத்திற்கு மிக்க நன்றி. நீங்க காசோலைக்கு இங்கு அலைந்து பெற்ற அனுபவங்களே அதிகமாக இருந்து இருக்கும். கூடவே உங்கள் துறையில் உள்ள நண்பரின் இடுகையையும் இணைத்து உள்ளீர்கள். விபரத்திற்கு சொல்லவும் வேண்டுமா?

வாங்க தேனம்மை.

கண்ணகி நீங்கள் கொடுத்த இரண்டு விமர்சனங்கள் என்றும் உற்சாகம் கொடுக்கக்கூடிய டானிக்,

வாழும் உயிர்கூட ஒருநாள் போகக் கூடியது தான் என்பதை மனிதர்கள் உணர்ந்தாலும் நடைமுறையில் நம்ப மறுக்கிறார்கள்

கண்ணன் இந்த வார்த்தைகள் இந்த எழுத்துலக தேடலை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது,

யோகேஷ் நான் சொன்னதில் தவறு ஏதும் இருக்கிறதா என்ன? ஆனால் இதில் எத்தனை அரசியல்? அடேங்கப்பா?

வாங்க சித்ரா. உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றிங்க,

ஜோதிஜி said...

மற்றப்படி, இந்த துறை இன்னும் அரசால் திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட (Regulate) வேண்டும் என்று நினைக்கிறேன், சாத்தியமா?

வாய்ப்பு என்பதே இல்லை ரதி. தீபாவளிக்குள் இங்கு சில புரட்சிகள் நடக்கும் என்று பட்சிகள் கூறுகிறது. குறிப்பிட்ட முதலாளிகளின் ஆதிக்கத்தை ஒடுக்க சிலர் கிளம்பி உள்ளார்கள். ஜெயித்தால் விடிவு காலத்தின் தொடக்கமாக இருக்கலாம். ஆனால் விடுவார்களா பழைய முதலைகள்?

இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகையை (GSP+) ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியதன் காரணம் போல் தான் இதுவும்?

இந்த இடத்தில் எனக்கு சற்று குழப்பம், ஐரோப்பிய யூனியன் செய்தது சரிதானே? உங்கள் பார்வை என்ன?

இங்குள்ள பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு இடையே பல லட்ச மக்களின் வாழ்வாதாரத்யே இந்த ஊர் காப்பாற்றிக் கொண்டுருக்கிறது என்பதை யோசிக்கும் போது ஏதோ ஒரு வகையில் மனதை சமாதானப்படுத்திக் கொள்ளத் தானே வேண்டியதாய் உள்ளது,

ஜோதிஜி said...

பதிவுலகை நாம் எப்படி உள் வாங்குகிறோம் என்பதில் உள்ளது, இது மறக்க வேண்டியதா... மனதிலேயே வைத்திருக்க வேண்டியதா என்பது.


உண்மை தான் நண்பா, சில நண்பர்கள் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தான் இதன் வீச்சு புரிகின்றது. உங்கள் கூற்று உண்மையானதே,

எஸ் சம்பத் said...

அந்நிய செலவாணிக்கு
ஆசைப்பட்டு அழிந்த பலர் முதலீடு
காதர் பேட்டை முழுக்க
கடை பரப்பி கிடக்கும் கதை
முன்னே ஒரு முறை
முனைந்து நான் பகர்ந்திருந்தேன்
அந்நிய முதலீடு
இந்திய திருநாட்டில் - விளைவு
திருவோடு ஏந்தி சிறுமுதலாளி பலர்
திசை தெரியாமல் தவிக்கும் அவலம்

பாகம் இரண்டில் தொடரட்டும் பலதகவல்
பதிவுகள் ஒன்று சேர்ந்து
புத்தகமாய் மாறுதற்கு
புதியதோர் வாழ்த்துச் சொல்வேன்

-சம்பத்-

Bibiliobibuli said...

//ஐரோப்பிய யூனியன் செய்தது சரிதானே? உங்கள் பார்வை என்ன?//

பாதிக்கப்பட்ட (பாதிக்கப்படாத ஈழத்தமிழர் யாராவது இருக்கிறார்களா என்ன?) ஓர் ஈழத்தமிழராய் சொல்கிறேன், "மிக, மிகச் சரி". எனக்குத்தெரிந்து இதுவரை ஈழத்தமிழர்களுக்காக சர்வதேசம் செய்த ஒரேயொரு நல்ல காரியம். அது கூட ஏற்றுமதி வரிச்சலுகைகளை பெற்றுக்கொள்வதில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த அடிப்படை விதிகளைக் கூட (குறிப்பாக மனித உரிமைகள் பற்றியது) இலங்கை அரசு பின்பற்றவில்லை என்பது தான். சரி, இது இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள தொழிலாளர்களை பாதிக்கிறதே என்று சிலர் வாதிடலாம். இலங்கை அரசியலில் ஏறக்குறைய 75% பெரும்பான்மையினருக்கு (சிங்களர்) தங்கள் எதிர்கால அரசியல் தலைவிதியை தீர்மானிக்க, முடிவெடுக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். யோசிப்பார்களா தெரியவில்லை. இது பற்றி விரிவாக பேசினால் அது அரசியல் ஆகிவிடும். ஜோதிஜியின் தளத்தில் நான் ஏதோ "Antisocial" போல ஆகிவிடுவேன். :)

ஜோதிஜி, நான் குறிப்பிட்ட நாட்டு உற்பத்திப்பொருட்களை பாவிப்பதில்லை என்பது என்னுடைய மனத்திருப்திக்காகத்தான். சில விடயங்களில் வெற்றி, தோல்வியின் எதிர்பார்ப்பின்றி ஈடுபாட்டோடு இருக்கும்போது அது அவரவர் வரையில் ஓர் திருப்தியை கொடுக்கும் அல்லவா. அது போல் தான் எனக்கு இதுவும்.

No hard feelings, please.

ஜோதிஜி said...

ரதி இதில் என்ன வருத்தம். எத்தனை பேர்கள் பின்னூட்டத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டுருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ வருடங்களக்கு பின்னால் எவரோ ஒருவர் வந்து படிக்கும் போது இடுகையைப் போலவே உங்கள் கருத்துள்ள பின்னூட்ட கருத்துக்களும் அவர்களுக்கு பயன்படக்கூடும்.

நீங்கள் சொன்ன மிகச் சரி என்பது என்னைப் பொறுத்தவரையிலும் சுயநலமாகவும் ஈழம் ஆதரவு கொள்களையின் சார்பாகவும் மிக மிக சரியே,

அரசியல் ஆனால் என்ன? பேசக்கூட உரிமை இல்லையா என்ன? தாரளமாக பேசலாம்,

உங்கள் திருப்திக்காக சொன்னது போலவே நானும் கடந்த பத்து ஆண்டுகளாக பல விதங்களில் பல கொள்கைகளில் உறுதியாக இந்த நிமிடம் வரைக்கும் இருந்து அதையே பின்பற்றி வருகின்றேன். இதில் சொன்னால் நம்முடைய பீப்பியை நாமே ஊதிக் கொள்வது போல் ஆகிவிடும்.

நன்றி ரதி.

ஜோதிஜி said...

சம்பத் உங்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்.

நெய்வேலி பாரதிக்குமார் said...

திருப்பூர் பற்றி பொதுவான கருதுகோள், எப்போது சென்றாலும் இல்லை என்று சொல்லாது வேலை தரும் சொர்க்க பூமி என்பதுதான் திருப்பூர் தொழில்சாலைகளின் சாயம் வெளுக்கச்செய்துவிட்டிர்கள். உங்கள் கட்டுரைகளை வாசித்தபின் கனத்த இதயத்தோடுதான் ப்ளாக்- லிருந்து வெளிவரவேண்டியிருக்கிறது . வலிமையான சொல்லாடல் உங்கள் பலம் . வாழ்த்துக்கள்

நெய்வேலி பாரதிக்குமார் said...

திருப்பூர் பற்றி பொதுவான கருதுகோள், எப்போது சென்றாலும் இல்லை என்று சொல்லாது வேலை தரும் சொர்க்க பூமி என்பதுதான் திருப்பூர் தொழில்சாலைகளின் சாயம் வெளுக்கச்செய்துவிட்டிர்கள். உங்கள் கட்டுரைகளை வாசித்தபின் கனத்த இதயத்தோடுதான் ப்ளாக்- லிருந்து வெளிவரவேண்டியிருக்கிறது . வலிமையான சொல்லாடல் உங்கள் பலம் . வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

பாரதிகுமார் உங்கள் வருகைக்கு நன்றி, உங்கள் ஊர் எனக்கு ரொம்பவே நெருக்கமான மறக்க முடியாத புதிய வாழ்க்கையைத் தந்த ஊர்.

Ravichandran Somu said...

திருப்பூர் ஆடைத்தொழில் பற்றி தெரிந்து கொள்ள உதவும் மற்றுமொரு நல்ல பதிவு.